தமிழ்நாடு செய்திகள்
இப்போ டிரைலர்.. நாளைக்கு மெயின் பிக்சர்.. வெளுத்து வாங்கப் போகும் கனமழை - வானிலை ஆர்வலர்
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
- தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியானது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் வேளையில் சென்னை ஒட்டிய பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் இன்று நள்ளிரவு மற்றும் நாளை காலை முதல் அதிகனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மெல்ல மேற்கு திசையில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.