தமிழ்நாடு செய்திகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை
- வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
- வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அனேக இடங்களில் வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னை மட்டுமில்லாமல் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.