தமிழ்நாடு செய்திகள்
நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாளை 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனழைக்கு வாய்ப்பு உள்ளது. கனமழை பெய்யும் போது 40 முதல் 50கிலோ மீட்டர் வேகத்தல் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.