தமிழ்நாடு செய்திகள்
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
- 'மோன்தா' புயல் காரணமாக சென்னைக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயல் காரணமாக சென்னைக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் இன்றும், நாளையும் கனமழையும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்றும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேல் மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.