தமிழ்நாடு செய்திகள்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

Published On 2024-11-29 02:01 IST   |   Update On 2024-11-29 02:01:00 IST
  • நள்ளிரவில் திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
  • ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

சென்னை:

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

நள்ளிரவில் திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சென்னையில் நள்ளிரவு ஒரு மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.

மேலும், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News