தமிழ்நாடு செய்திகள்

நமக்கு இருக்குற ஒரே காமெடி அவர்தான்- கரு.பழனியப்பன்

Published On 2025-04-02 04:59 IST   |   Update On 2025-04-02 06:34:00 IST
  • அப்போது யார் எதிரியாக நினைத்தார்களோ அவர்களின் பெயரை வைத்து மகிழ்ந்த கட்சி தான் திமுக.
  • கூட்டணி பற்றி ரகசியமாக பேசிவிட்டு கேட்டால் நாங்கள் சும்மதான் போயிட்டு வந்தோம் என்கிறார்கள்.

சென்னை:

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார். அவர் பேசியாதவது:-

நிகழ்ச்சியில் பேசிய இரண்டு அமைச்சர்களும் அரசியல் பற்றி பேசாமல், இந்த ஆட்சியின் சாதனைகளை பற்றி பேசினார்கள். முதலமைச்சரின் திட்டங்களை பற்றி பேசினார்கள். அது தான் மனிதனுக்கு கிடைக்கின்ற மிக சிறந்த பாராட்டு என்று நினைகின்றேன்.

திமுக ஆட்சியில் நூலகம் கட்டினார்கள். முதலில் சென்னை நூலகத்திற்கு அண்ணாவின் பெயர், மதுரையில் நூலகம் கட்டி கலைஞர் பெயர், கோவை நூலகத்திற்கு பெரியார் பெயர் வைத்துள்ளனர்.

ஆனால் திருச்சியில் உள்ள நூலகத்திற்கு எதற்காக காமராஜர் பெயர் வைக்க வேண்டும். ஏன் என்றால் விஜய் என்னுடைய எதிரி திமுக தான் என்று சொன்னார். அதை முதல் முதலில் 1958ல் சட்டசபையில் என்னுடைய ஒரே எதிரி திமுக தான் என்று காமராஜர் சொன்னார்.

அப்போது யார் எதிரியாக நினைத்தார்களோ அவர்களின் பெயரை வைத்து மகிழ்ந்த கட்சி தான் திமுக.

கூட்டணி பற்றி ரகசியமாக பேசிவிட்டு கேட்டால் நாங்கள் சும்மாதான் போயிட்டு வந்தோம் என்கிறார்கள்.

ஆனால் அமித்ஷாவோ கூட்டணியை பற்றி பேசினோம் என்று சொல்கிறார்.

நமக்கு இருக்குற ஒரே காமெடி அண்ணாமலை. அவரையும் மாத்திடாதீங்க.. அந்தக் கட்டுல எல்லாமே ஜோக்கர்தான் என அவர் கூறினார்.

Tags:    

Similar News