null
காவலாளி அஜித் குமார் உயிரிழப்பு: 5 காவலர்கள் கைது - FIRல் அதிர்ச்சி தகவல்
- லாக்-அப் டெத் காரணமாக 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
- கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோவிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித் குமார் என்ற வாலிபரை, நகை திருட்டு புகார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர் கடுமையாக அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. லாக்-அப் டெத் காரணமாக 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இறந்த நபர் தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.
இதனிடையே, அஜித் மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அஜித்குமார் போலீசிடமிருந்து தப்பிக்க முயற்சித்த போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.