தமிழ்நாடு செய்திகள்

தென்காசியில் அரசு வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு - வழக்கறிஞர்கள் போராட்டம்

Published On 2025-12-03 14:43 IST   |   Update On 2025-12-03 14:54:00 IST
  • படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கவலைக்கிடமாக நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் கூலக்கடை பஜார் என்ற இடத்தில் அவரது அலுவலகத்திலேயே வைத்து அவர் மர்ம நபரால் அரிவாளால் வெட்டப்பட்டார்

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கவலைக்கிடமாக நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை வெட்டிவிட்டு, எந்த பயமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரசு வழக்கறிஞர் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News