தமிழ்நாடு செய்திகள்

ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ. 86 ஆயிரத்தை தாண்டியது

Published On 2025-09-29 17:17 IST   |   Update On 2025-09-29 17:17:00 IST
  • இன்று காலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்தது.
  • மாலை 560 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,700-க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வழக்கமாக காலையில் ஒருமுறை தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். ஆனால் இன்று மாலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

காலையில் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் 70 ரூபாய் உயர்ந்தது. இன்று ஒரேநாளில் கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு 1040 ரூபாய் உயர்ந்து 86,160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 10770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுறது.

முன்னதாக,

தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத உச்சத்தை பதிவு செய்து இருந்தது. அதன் பின்னர் சற்று விலை குறைய தொடங்கியது. இதனால் தங்கம் விலை ரூ.84 ஆயிரத்துக்கு சரிந்தது.

ஆனால், மீண்டும் கடந்த 26-ந்தேதி முதல் தங்கம் விலை எகிறத் தொடங்கியுள்ளது. ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News