தமிழ்நாடு செய்திகள்

ஆன்மிகம் மனித வாழ்வியல் நெறிமுறைகளை முறைப்படுத்துவதற்கான அடித்தளம்- ஜி.கே.வாசன்

Published On 2025-06-21 14:01 IST   |   Update On 2025-06-21 14:01:00 IST
  • ஆறுபடைகளையும் மதுரையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள்.
  • தமிழ் கடவுள் முருகன். அதன் அடிப்படையிலேயே முருகன் மாநாட்டில் முருகனை தரிசிக்க வழிபட இங்கே வருகை புரிந்து உள்ளேன்.

மதுரை:

மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் நாளை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் முருகனின் அறுபடை வீடுகள் கண்காட்சி அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான முருக பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இந்த அறுபடை வீடு மாதிரி அமைப்பை இன்று பார்வையிட்டார். பின்னர் ஆறுபடை முருகனை சுவாமி தரிசனம் செய்து மனமுருகி வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சங்கம் வளர்த்து தமிழை வளர்த்த இடம் மதுரை. முருகப்பெருமான் ஆறுபடைகளிலே இரண்டு படை வீடுகள் மதுரையிலே அமைந்துள்ளது. அத்தகைய புண்ணியம் பெற்ற மதுரையிலே முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.

ஆறுபடைகளையும் மதுரையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். இதிலே அரசியல் கிடையாது. இருப்பினும் ஆன்மிகம் என்பது மனிதனுடைய வாழ்வியல் நெறிமுறைபடுத்துவதற்கும், ஒழுக்கப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் அடித்தளம் என்பதை இந்த முருகன் மாநாட்டில் பெருமையுடன் கூறுகிறேன்.

தமிழ் கடவுள் முருகன். அதன் அடிப்படையிலேயே முருகன் மாநாட்டில் முருகனை தரிசிக்க வழிபட இங்கே வருகை புரிந்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News