தமிழ்நாடு செய்திகள்
கனமழை எதிரொலி: தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் விமானங்கள்
- சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
தாம்பரம், விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 8 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.