தமிழ்நாடு செய்திகள்

வாணியம்பாடி அருகே பழைய இரும்பு பொருட்கள் குடோனில் தீ விபத்து

Published On 2025-06-04 13:41 IST   |   Update On 2025-06-04 13:41:00 IST
  • காரின் உதிரி பாகங்கள் சேமித்து வைத்திருந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
  • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வன்னியடிகளார் நகர் பகுதியில் குப்பன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் குடோன் உள்ளது.

இங்கு காரின் உதிரி பாகங்கள் சேமித்து வைத்திருந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பொருட்களில் தீ பரவியது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் கடும் புகைமூட்டம் எழுந்தது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News