தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் - மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
- பயணிகளின் வசதிக்காக வாரநாட்களில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளது.
- ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரெயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது.
எனவே, வெளிமாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காகவும், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏறுவதற்கு தாம்பரம் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் வாரநாட்களில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் ஆகஸ்டு 18-ந்தேதி வரையில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* தாம்பரத்தில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரை செல்லும்.
* கடற்கரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக அதிகாலை 4.25 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும்.
* செங்கல்பட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 10.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
* கடற்கரையில் இருந்து காலை 11.52 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக காலை 11.55 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும்.
* கடற்கரையில் இருந்து மதியம் 12.02 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக மதியம் 12.10 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும்.
*கடற்கரையில் இருந்து மதியம் 12.28 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக மதியம் 12.25 மணிக்கு கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும்.
* அரக்கோணத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயில், காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 9.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மேற்கண்ட ரெயில்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரநாட்களில் இயக்கப்படும் ரெயில்கள் ஆகும்.
* ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரெயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை கடற்கரை-தாம்பரம் இருமார்க்கமாக கூடுதலாக ஒரு சிறப்பு ரெயில் மட்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரைக்கும், மறுமார்க்கமாக கடற்ரையில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரத்திற்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.