தமிழ்நாடு செய்திகள்
மறைந்த இல.கணேசன் வீட்டிற்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
- இல.கணேசன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- கடந்த 15-ந்தேதி உடல்நலக்குறைவால் இல.கணேசன் காலமானார்.
மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வீட்டிற்கு நேரில் சென்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.
சென்னை தி.நகரில் உள்ள இல.கணேசன் வீட்டிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு வைக்கப்பட்டு இருந்த இல.கணேசன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், இல.கணேசன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த 15-ந்தேதி உடல்நலக்குறைவால் இல.கணேசன் காலமானார். அந்நேரம் 'மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற தொடர் பிரசார சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு இருந்தார். அதனால் இல.கணேசனின் மறைவுக்கு வரமுடியாத காரணத்தினால் இன்று இல.கணேசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.