தமிழ்நாடு செய்திகள்
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர் மீது ஒழுங்கு நடவடிக்கை
- மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும்.
- முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தினசரி இயக்க வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart-ல் ஓட்டுநர், நடத்துநர்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.
மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும்.
அடிக்கடி பணிக்கு வராமல், முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.