தமிழ்நாடு செய்திகள்

ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் - திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2025-08-24 15:15 IST   |   Update On 2025-08-24 15:15:00 IST
  • முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்?
  • ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது?

ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று விசிக தலைவர் திருமாவளவனை குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். வீட்டை சுற்றி ராணுவத்தினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். வலுக்கட்டாயமாக பணி விலக வைக்கப்பட்டுள்ளார் ஜெகதீப் தன்கர். பதவி விலக நிர்பந்திக்கப்பட்டது ஏன் என்பது பற்றி தெரியவில்லை" என்று குற்றம் சாட்டினார். 

Tags:    

Similar News