தமிழ்நாடு செய்திகள்

டிட்வா புயல்: சூறைக்காற்று வீசுவதால் 23 ரெயில்களின் சேவையில் மாற்றம்

Published On 2025-11-28 17:23 IST   |   Update On 2025-11-28 17:23:00 IST
  • பாம்பன் பாலத்தில் 58 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.
  • இன்றும், நாளையும் 23 ரெியல்களில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

டிட்வா புயல் நெருங்கி வருவதால், பாம்பன் பாலத்தில் 58 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது. இதனால், 23 ரெயில்களில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் 23 ரெியல்களில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் சேது விரைவு ரெயில் நாளை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்- திருவனந்தபுரம் விரைவு ரெயில் நாளை ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்.

ராமேஸ்வரம்- திருச்சி விரைவு ரெயில் நாளை மானாமதுரையில் இருந்து இயக்கப்படும்.

ராமேஸ்வரத்தில் இருந்து ஒகா செல்லும் விரைவு ரெயில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News