தமிழ்நாடு செய்திகள்

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்திற்கு காரணம் என்ன?- அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்

Published On 2025-07-08 12:18 IST   |   Update On 2025-07-08 12:18:00 IST
  • கேட் திறந்திருந்தால் 1 கி.மீ முன்னதாக இருக்கும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்.
  • வேன் ஓட்டுநர் மீது எந்த தவறும் கிடையாது.

கடலூர்:

கடலூர் செம்மங்குப்பத்தில் இன்டர்லாக்கிங் அமைப்பு இல்லாததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

சிக்னலால் கட்டுப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அமைப்பே இன்டர்லாக்கிங் எனப்படும். கேட் திறந்திருந்தால் 1 கி.மீ முன்னதாக இருக்கும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும். சிக்னலைப் பார்த்து ஓட்டுநர் ரெயிலை நிறுத்திவிடுவார் என்பதால் விபத்துகள் தவிர்க்கப்படும்.

செம்மங்குப்பம் கேட்டில் இன்டர்லாக்கிங் இல்லாததால் கேட் திறந்திருந்ததை ஓட்டுநரால் அறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, விபத்துக்குள்ளான பள்ளி வேனில் அடுத்த நிறுத்தத்தில் ஏற வேண்டிய பள்ளி மாணவன் ஆர்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், ரெயில் கேட் திறந்திருந்ததை பார்த்தேன். வேன் ஓட்டுநர் மீது எந்த தவறும் கிடையாது. கேட் கீப்பர் தான் உறங்கி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரும், ரெயில்வேதுறையில் நிகழும் குறைபாடுகளுமே காரணம் என்று கருதப்படுகிறது. 

Tags:    

Similar News