த.வெ.க. நிர்வாகி மதியழகனை விசாரிக்க SIT-க்கு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
- சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- நீதிமன்றக் காவலில் உள்ள மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனு.
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று த.வெ.க தரப்பில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு முறையீடு செய்யப்பட்டது
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி த.வெ.க.வினரின் மனுவை நாளை (10-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்றக் காவலில் உள்ள மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை 2 நாட்கள் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.