தமிழ்நாடு செய்திகள்
null

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

Published On 2025-07-07 10:39 IST   |   Update On 2025-07-07 10:57:00 IST
  • நாளை வரை மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
  • 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 47 ஆயிரத்து 372 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது.

முதற்கட்டமாக 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு தொடங்கியது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நாளை வரை நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து பொதுப்பிரிவில் உள்ள சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளநிலையில், 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 47 ஆயிரத்து 372 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.

விளையாட்டு பிரிவின் கீழ் 2 ஆயிரத்து 446 மாணவர்களும், ராணுவத்தினர் பிரிவின் கீழ் 473 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News