தமிழ்நாடு செய்திகள்
'கூட்டணி ஆட்சி' இ.பி.எஸ். பெயரை குறிப்பிடாத அமித் ஷா - ஆர்.பி.உதயகுமார் ரியாக்ஷன்
- வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுக்கி அகற்றுவோம்.
- தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி தென்மண்டல பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது,
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுக்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
இந்நிலையில் மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், நெல்லையில் நடந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் 'கூட்டணி ஆட்சி' என்று அமித் ஷா பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், மதுரைக்கு வரும் 1-ந்தேதி புரட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவர் உங்களின் எல்லா கேள்விக்கும் பதில் அளிப்பார் என்று கூறினார்.