தமிழ்நாடு செய்திகள்
இங்கிலாந்தில் பாசத்துடன் அரவணைக்கப்பட்டேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
- லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்த புகைப்படங்களை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், இங்கிலாந்தில் கால் பதித்த போது பாசத்துடன் அரவணைக்கப்பட்டேன் என கூறியுள்ளார்.
லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்த புகைப்படங்களை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.