தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு

Published On 2025-06-20 14:19 IST   |   Update On 2025-06-20 14:19:00 IST
  • அரசாணை பெறப்பட்டவை எத்தனை? செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் எவ்வளவு? என்பது போன்ற விவரங்களை ஆய்வு செய்தார்.
  • பரந்தூர் விமான நிலையத்தின் வருங்கால செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆய்வுகள் நடத்தினார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக துறை வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை வாரியான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில் இன்று வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தொழில் முதலீடுக்கு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை ஆகிய 4 துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? முடிவுற்ற பணிகள் எத்தனை? அரசாணை பெறப்பட்டவை எத்தனை? செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் எவ்வளவு? என்பது போன்ற விவரங்களை ஆய்வு செய்தார்.

இத்துடன் பரந்தூர் விமான நிலையத்தின் வருங்கால செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆய்வுகள் நடத்தினார்.

இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தி ரன், அனிதா ராதாகிருஷ் ணன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் துறை வாரியான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News