தமிழ்நாடு செய்திகள்

இந்தியாவுக்கே தமிழ்நாடு லீடர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published On 2025-06-10 12:04 IST   |   Update On 2025-06-10 12:04:00 IST
  • பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்போருக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது என் கனவு.
  • வெறும் கடன் உதவி என்று கூறி உலக வங்கியின் உதவியை சுருக்கி பார்க்க முடியாது.

உலக வங்கி சார்பில் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* இந்தியாவுக்கே தமிழ்நாடு லீடர் என்ற நிலையை அடைந்திருக்கிறோம்.

* தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கியின் உதவி உள்ளது.

* நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திலும் உலக வங்கியின் பங்கு உள்ளது.

* சாலை மேம்பாடு, நீர் பாசனம் போன்ற திட்டங்களிலும் உலக வங்கி உதவி உள்ளது.

* பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்போருக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது என் கனவு.

* மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனில் சிறந்த முன்னெடுப்புகளை தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது.

* we safe எனும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

* நகரமயமாக்கல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

* வெறும் கடன் உதவி என்று கூறி உலக வங்கியின் உதவியை சுருக்கி பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News