தமிழ்நாடு செய்திகள்

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Published On 2025-05-30 14:44 IST   |   Update On 2025-05-30 14:44:00 IST
  • இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • சென்னையை பொறுத்தவரையில் கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக் பெய்தது.

சென்னையில் பாரிமுனை, எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அடையாறு, மெரினா, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Tags:    

Similar News