தமிழ்நாடு செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
- அண்ணா பல்கலைக் கழகத்திற்கு இதுவரை 18 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
- மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மிரட்டலை தொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் மோப்பநாய் உதவியுடன் அண்ணா பல்கலைக் கழகத்தில் சோதனை செய்ததில் மிரட்டல் புரளி என தெரியவந்தது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இதுவரை 18 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.