null
விஜய் பிரசார வாகனம் மீது பைக் மோதி விபத்து - தீயாய் பரவும் வீடியோ
- விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
- விஜய் பிரசார பேருந்தின் முன்பு பைக்கில் சென்று சிலர் வீடியோ எடுக்கின்றனர்.
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.
இதனிடையே, விஜய் பிரசார பேருந்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விஜய் பிரசார பேருந்தின் முன்பு பைக்கில் சென்று சிலர் வீடியோ எடுக்கின்றனர். அப்போது பக்கத்தில் இருந்த பைக் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து பிரசார பேருந்தின் சக்கரத்தில் மோதுகிறது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பைக்கில் சென்றவர்கள் சிறிது காயத்தோடு உயிர் பிழைத்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, விஜய் ரசிகர்களின் இத்தகைய செயல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.