தமிழ்நாடு செய்திகள்

பயணிகளின் கவனத்திற்கு..! சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்

Published On 2025-09-11 20:32 IST   |   Update On 2025-09-11 20:32:00 IST
  • கோயம்பேடு - அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை இருக்காது.
  • சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் கோயம்பேடு வரை மட்டுமே செல்லும்.

சென்னை வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மேல் 2ம் கட்ட வழித்தட கட்டுமானப் பணிகளால் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதிகள் வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்களில், காலை 5 மணி முதல் 6 மணி வரை கோயம்பேடு - அசோக் நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை இருக்காது.

மேற்குறிப்பிட்ட நேரத்தில், விமான நிலையம்/ செயிண்ட் தாமஸ் மவுண்டில் இருந்து புறப்படும் ரயில்கள் அசோக் நகர் வரை மட்டுமே இயங்கும்.

அதேபோல, சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் கோயம்பேடு வரை மட்டுமே செல்லும். பயணிகள் வசதிக்காக அந்த நேரத்தில் மட்டும் கோயம்பேடு - அசோக்நகர் இடையே 10 நிமிட இடைவேளையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மற்ற நேரங்களில் வழக்கமான ரெயில் சேவை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News