தமிழ்நாடு செய்திகள்

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

Published On 2025-10-15 14:59 IST   |   Update On 2025-10-15 14:59:00 IST
  • நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் அப்துல் கலாம் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
  • எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்தவர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டிய அறிவியல் மேதை - முன்னாள் குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்!

உயர்கல்விக்காக நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் தன்னிறைவுக்கும் உழைத்தால், அதுதான் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்குச் செலுத்தும் மிகச்சிறந்த நன்றிக்கடன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News