தமிழ்நாடு செய்திகள்
பச்சைப்பயறு கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும்- அன்புமணி
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுப்பதால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
- மத்திய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்கு, அதாவது 7,000 டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுப்பதால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் இழப்பை சந்தித்து கடன் வலையில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்க மத்திய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்கு, அதாவது 7,000 டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக அரசே அதன் சொந்த செலவில் பச்சைப் பயறை உச்சவரம்பின்றி கொள்முதல் செய்து உழவர்களின் துயரத்தைப் போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.