தமிழ்நாடு செய்திகள்
ஆதரவற்ற குழந்தைகளை குடும்ப அட்டை இல்லாமல் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அனுமதி
- இரட்டை பதிவுகளை தவிர்க்கும் வகையில் ஆதார் எண் மட்டும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 843 குழந்தைகள் நல மையங்களில் உள்ள 15,092 குழந்தைகள் பயன்பெறுவார்கள்.
குழந்தைகள் நல மையங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை வருமான சான்றிதழ், குடும்ப அட்டை இல்லாமல் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அரசு அனுமதி அளித்து தம்ழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இரட்டை பதிவுகளை தவிர்க்கும் வகையில் ஆதார் எண் மட்டும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாணையை அடுத்து 843 குழந்தைகள் நல மையங்களில் உள்ள 15,092 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.