தமிழ்நாடு செய்திகள்

பணியிட மாறுதல் அனைத்தும் கவுன்சிலிங்கில் மட்டுமே வழங்க வேண்டும்- மதுரை நீதிமன்றம்

Published On 2025-05-22 18:41 IST   |   Update On 2025-05-22 18:41:00 IST
  • வேறு முறையில் பணியிட மாறுதல் செய்திருந்தால் அதற்கு தடை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • வேறு வகை பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்தால் அதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மருத்துவத் துறையில் பணியாற்றும் இளநிலை நிர்வாக அலுவலர்கள் கவுன்சிலிங்கில் மட்டுமே மாறுதல் வழங்க உத்தரவிடகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

மருத்துவ அலுவலர்களுக்கான பொது கலந்தாய்வை முறையாக நடத்தாமல் விதி மீறல் நடத்தப்பட்டுள்ளதாகவும், சட்ட விதிகளுக்கு முரணாக பணியிட மாறுதல் செய்யப்பட்டதற்கு தடை கோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வந்தது.

விசாரணையின்போது, மருத்துவத்துறையில் இளநிலை நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் அனைத்தும் கவுன்சிலிங்கில் மட்டுமே வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், பொது கலந்தாய்வில் மாறுதல் வழங்காது வேறு முறையில் பணியிட மாறுதல் செய்திருந்தால் அதற்கு தடை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேறு வகை பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்தால் அதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News