தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
- சென்னையில் காற்றின் தரக்குறியீடு 39 லிருந்து 142ஆக மோசமடைந்து மிதமான பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காற்று மாசு காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, இதய நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 10 நாட்களில் காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசமடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் காற்றின் தரக்குறியீடு 39 லிருந்து 142ஆக மோசமடைந்து மிதமான பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, இதய நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் காற்று மாசு அதிகரிக்கப்பட்டது. அப்போது சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியது. அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்தது.