தமிழ்நாடு செய்திகள்

திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிப்பு

Published On 2025-11-28 10:45 IST   |   Update On 2025-11-28 10:59:00 IST
  • அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
  • டிட்வா புயல் நெருங்குவதால் அதி கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர், புதுக்கோட்டை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

டிட்வா புயல் நெருங்குவதால் அதி கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News