வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும் ஆதரவாக டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரசாரம் செய்வார்- ரெங்கசாமி
- வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அ.ம.மு.க. தயாராகி வருகிறது.
- தமிழகத்தின் தற்போதைய தி.மு.க. ஆட்சியை அகற்ற பாடுபடுவோம்.
நாகப்பட்டினம்:
நாகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அ.ம.மு.க. துணை பொது செயலாளர் ரெங்கசாமி பேட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் மட்டுமே மாற்று கட்சியில் இணைந்துள்ளார்.
மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய செயலாளர் நகர செயலாளர்கள் தற்போது வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அ.ம.மு.க. தயாராகி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். தமிழகத்தின் தற்போதைய தி.மு.க. ஆட்சியை அகற்ற பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.