நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
- ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு.
- நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.
அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, நடிகர் கிருஷ்ணா, கெவினை ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனை முடிந்து நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.