தமிழ்நாடு செய்திகள்

ரெயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசாரை படத்தில் காணலாம்.

சேலம் வழியாக செல்லும் ரெயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2025-04-10 15:03 IST   |   Update On 2025-04-10 15:03:00 IST
  • யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.
  • பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தி செல்வதும் அதனை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ரெயில்வே போதை பொருள் தடுப்பு போலீசார் ரெயில்களில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரெயிலில் இன்று காலை போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது கேட்பாரற்று கிடந்த ஒரு கைப்பையை எடுத்து சோதனை செய்தபோது அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் அதற்கு யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.

இதையடுத்து கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ரெயில்வே போலீசார் கஞ்சா கடத்தி கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News