தமிழ்நாடு செய்திகள்
மதுரையில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு
- மழை காரணமாக அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
- பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்த நிலையில், மதுரை வலையங்குளத்தில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மழை காரணமாக அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் அம்மாபிள்ளை (65), வெங்கடம்மா (55), வீரமணி (10) ஆகியோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.