தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. மாநாட்டுக்கு சென்ற சென்னை வாலிபர் உள்பட 2 பேர் திடீர் சாவு

Published On 2025-08-22 05:18 IST   |   Update On 2025-08-22 05:18:00 IST
  • த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது.
  • மதுரை சக்கிமங்கலம் அருகே நேற்று காலை சென்றபோது அவர் மயங்கி விழுந்து கிடந்தார்.

மதுரை:

த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த பிரபாகரன் (33) தனது நண்பர்களுடன் வேனில் மதுரை த.வெ.க. மாநாட்டுக்குச் சென்றார். மதுரை சக்கிமங்கலம் அருகே நேற்று காலை சென்றபோது அவர் மயங்கி விழுந்து கிடந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதேபோல, நீலகிரி மாவட்டம் கேம்ப் லையன் பகுதியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன் (18) என்ற வாலிபர் மாநாடு முடிந்து காரில் நண்பர்களுடன் ஊருக்கு திரும்பியபோது திடீரென மயக்கம் அடைந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

அதே காரில் பயணம் செய்த ரவி (18) என்பவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ரவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Similar News