தமிழ்நாடு செய்திகள்
உதகை 127வது மலர் கண்காட்சி- இன்று ஒரே நாளில் 13,000 பேர் கண்டு ரசிப்பு
- 127-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.
- கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.
கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு பல வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி., அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த 127வது மலர் கண்காட்சியை 13,000 பேர் கண்டு ரசித்துள்ளதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
இன்று முதல் வரும் 25ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியைக் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை காண அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.