தமிழ்நாடு

ஜவுளிக்கடைக்குள் புகுந்து காதலிக்க மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்- வாலிபர் கைது

Update: 2022-10-05 08:54 GMT
  • இளம்பெண் ஒருவர் வளசரவாக்கத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
  • காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கடை ஊழியர்கள் முன்னிலையில் முத்து சரமாரியாக அடித்து உதைத்தார்.

போரூர்:

விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வளசரவாக்கத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரை, வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த வெல்டிங் கடை ஊழியரான முத்து (30) என்பவர் கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்தார். ஆனால் இதனை இளம்பெண் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் இளம்பெண் வேலை பார்க்கும் ஜவுளிக்கடைக்கு முத்து சென்றார். அங்கு காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கடை ஊழியர்கள் முன்னிலையில் அவர் சரமாரியாக அடித்து உதைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News