தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரத்தில் "உலக சுற்றுலா தின விழா" ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலம்

Published On 2023-09-28 14:59 IST   |   Update On 2023-09-28 14:59:00 IST
  • 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
  • மாமல்லபுரம் அபிராமி யோகாலயாவினர் இவர்களை ஒருங்கிணைத்து இந்த பழங்குடி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடபட்டது. விழாவில் பரதநாட்டியம், கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், பொய்கால்குதிரை என பாரம்பரிய நடனங்கள் நடத்தப்பட்டது. விழாவில் செங்கல்பட்டு சப்-கலெக்டர் லட்சுமிபதி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சிற்பக்கல்லூரி முதல்வர் ராமன், சுர்தீப் ரங்கசாமி, வழிகாட்டிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக திருக்கழுகுன்றம், கடம்பாடி, தண்டரை, மானாமதி சுற்றுவட்டார பகுதி இருளர் பழங்குடி பெண்கள் தங்கள் வீட்டில் இருந்து உற்பத்தி செய்யும் கை எம்ராய்டரி துணிகளை, அர்ச்சுனன்தபசு அருகே ஸ்டால் அமைத்து காட்சி படுத்தி இருந்தனர். மயில், பழங்குடி வேட்டை, மாம்பழம், மயில், கோலம் உள்ளிட்ட டிசைன்கள் அங்கு வந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. மாமல்லபுரம் அபிராமி யோகாலயாவினர் இவர்களை ஒருங்கிணைத்து இந்த பழங்குடி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News