தமிழ்நாடு

"ஓம் சக்தி பராசக்தி" என்ற முழக்கங்களுடன்.. பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம்

Published On 2023-10-20 12:05 GMT   |   Update On 2023-10-20 12:13 GMT
  • இறுதிச்சடங்கு நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்றே்பு.
  • உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பளிங்கு சிலை வைக்கப்பட உள்ளது.

பங்காரு அடிகளாருக்கு நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இறப்பு செய்தி கேட்டதும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த மேல்மருவத்தூர் நோக்கி ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. விடிய விடிய பக்தர்கள் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இன்று மாலை பங்காரு அடிகளார் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இறுதிச்சடங்கு நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, எம்.பி.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, ஓம் சக்தி பராசக்தி என பக்தர்கள் முழுங்க பங்காரு அடிகளாரின் உடல், சித்தர் முறைப்படி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடலுக்கு 6 மூலிகைகள் மற்றும் பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

அடிகளார் அருள்வாக்கு சொல்லும் புற்று மண்டபம் கருவறை அருகே உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பளிங்கு சிலை வைக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News