தமிழ்நாடு செய்திகள்

தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் ஓராவி அருவி.

கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் ஓராவி அருவி பாதை வசதி ஏற்படுத்தப்படுமா?

Published On 2023-04-13 11:17 IST   |   Update On 2023-04-13 11:17:00 IST
  • கடந்த 2019-ம் ஆண்டு ஓராவி அருவி சுற்றுலா பட்டியலில் இணைக்கப்பட்டது.
  • சுற்றுலா பயணிகள் எழில் கொஞ்சும் அருவியை காணமுடியாத நிலை உள்ளது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நகர் பகுதியில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் மலைகிராமங்களுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக வனப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை கண்டு ரசித்து வருகின்றனர். வெள்ளிநீர்வீழ்ச்சி, கரடிசோலை அருவி, வட்டக்கானல் பாம்பார் அருவி, தேவதை அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்நிலையில் வெளிஉலகுக்கு தெரியாத வண்ணம் கொடைக்கானல்-பழனி சாலையில் பேத்துப்பாறை அருகே பாரதிஅண்ணாநகர் பகுதியில் ஓராவி அருவி அமைந்துள்ளது.

இந்த அருவியில் ஆண்டு முழுவதும் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஓராவி அருவி சுற்றுலா பட்டியலில் இணைக்கப்பட்டது. ஆனால் இந்த அருவிக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் எழில் கொஞ்சும் அருவியை காணமுடியாத நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் ஓராவி அருவிக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்து சுற்றுலா பயணிகள் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News