தமிழ்நாடு

புழல் ஏரிக்கு நீர்வரத்து 1,276 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-12-03 10:30 GMT   |   Update On 2023-12-03 10:30 GMT
  • பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 830 அடியாக அதிகரித்து இருக்கிறது.
  • சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 777 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

செங்குன்றம்:

தொடர்மழை காரணமாக புழல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 522 கனஅடியாக இருந்து நீர்வரத்து இன்று காலை 1276 கனஅடியாக உயர்ந்து உள்ளது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. இதில் தற்போது 18.78 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் 2,767 மி.கனஅடிக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பூண்டி ஏரிக்கும் நீர்வரத்து 830 அடியாக அதிகரித்து இருக்கிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் 32 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2241 மி.கனஅடி தண்ணீர் நிரம்பியுள்ளது. 25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 777 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 890 கனஅடி தண்ணீர் வருகிறது. 612 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News