தமிழ்நாடு செய்திகள்

புழல் ஏரி

சென்னை ஏரிகளில் நீர் இருப்பு 6.68 டி.எம்.சி.யாக குறைந்தது

Published On 2022-10-29 10:47 IST   |   Update On 2022-10-29 10:47:00 IST
  • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஏரிகளிலும் 9.50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.
  • சென்னையில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தொடர்ந்து எடுக்கப்படுவதால் நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்துள்ளது.

சென்னை:

புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 5 ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி. ஆகும்.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 2.71 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. புழல் ஏரியில் 2.51 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் 0.78 டி.எம்.சி. தண்ணீரும், சோழவரம் ஏரியில் 0.18 டி.எம்.சி. தண்ணீரும், தேர்வாய் கண்டிகை ஏரியில் 0.50 டி.எம்.சி. தண்ணீரும் இருப்பில் உள்ளது.

5 ஏரிகளிலும் மொத்தம் 6.68 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த நீரை வைத்து சென்னையின் குடிநீர் தேவையை 6 மாதங்கள் பூர்த்தி செய்ய முடியும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஏரிகளிலும் 9.50 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.

தற்போது கடந்த ஆண்டை விட 2.82 டி.எம்.சி. தண்ணீர் குறைவாக உள்ளது. மேலும் சென்னையில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தொடர்ந்து எடுக்கப்படுவதால் நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி இந்த 5 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். அதன் மூலம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News