தமிழ்நாடு

வெப்பத்தை தணிக்க ஷவரில் உல்லாச குளியல் போடும் யானையையும், பாம்பு மீது தண்ணீர் தெளிக்கப்படுவதையும் காணலாம்

கோடை விடுமுறை- வண்டலூர் பூங்காவில் ஒரேநாளில் 25 ஆயிரம் பேர் குவிந்தனர்

Published On 2023-05-08 09:05 GMT   |   Update On 2023-05-08 09:05 GMT
  • வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
  • கோடை வெயிலை சமாளிக்க பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

வண்டலூர்:

வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் 25 ஆயிரம் பேர் பூங்காவை கண்டு ரசித்தனர்.

கோடை விடுமுறையையொட்டி பார்வையாளர்களின் வசதிக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா இந்த மாதம் (மே) முழுவதும் செவ்வாய்கிழமை விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலை சமாளிக்க பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நீர்சத்து அதிகம் உள்ள பழங்கள் உள்ளிட்டவை அதிகம் வழங்கப்படுகிறது.

யானைகளுக்கு ஷவர் குளியில் ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளன. யானைகள் ஷவரில் ஆனந்த குளியல் போடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Tags:    

Similar News