தமிழ்நாடு

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்

Published On 2023-03-05 09:20 GMT   |   Update On 2023-03-05 09:20 GMT
  • கோவிலை ரூ.1.25 கோடி செலவில் புதுப்பித்து கடந்த ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
  • விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது.

இந்த கோவிலை ரூ.1.25 கோடி செலவில் புதுப்பித்து கடந்த ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இந்நிலையில், இக்கோவிலுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் மற்றும் கிருத்திகை-சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இவருடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார், சோழவரம் வடக்கு மண்டல் பொதுச் செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி ஏதும் வேண்டாம் எனக்கூறி விட்டு மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News