தமிழ்நாடு

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி வாலிபரிடம் பணம் மோசடி: 2 பேர் கைது

Published On 2023-10-04 08:59 GMT   |   Update On 2023-10-04 08:59 GMT
  • பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் பெயரில் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
  • செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவரை தொடர்பு கொண்ட நபர்கள் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு தவணைகளில் ரூ.17 ஆயிரம் பெற்றனர். ஆனால் கூறியபடி அவர்கள் அஜித்குமாரை சினிமா படத்தில் நடிக்க வைக்கவில்லை.

விசாரணையில் அந்த நபர்கள் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் பெயரில் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

இதுகுறித்து செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டது விருத்தாச்சலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதியை சேர்ந்த சுதாகரன் மற்றும் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, பொதுமக்கள் இதுபோன்று சமூக வலைதளங்களில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் செயல்பாடு மூலமாகவோ முன்பணமாக பணத்தை கேட்டால் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். சைபர் கிரைம் குற்றங்களினால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களது புகார்களை அளிக்கலாம் என்றனர்.

Tags:    

Similar News