தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

Published On 2024-01-10 07:42 IST   |   Update On 2024-01-10 07:42:00 IST
  • தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையும், ஐ.என்.டி.யூ.சி. சங்கமும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
  • சென்னையில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை:

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதே சமயம் பெரும்பாலான தொழிலாளர்களை கொண்ட தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையும், ஐ.என்.டி.யூ.சி. சங்கமும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

இதனால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடியதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி மாநிலம் முழுவதும் 96 சதவீத பஸ்கள் ஓடியதாக அவர்கள் கூறியுள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் 97 சதவீத பஸ்கள் ஓடியதாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 6 மணி நிலவரப்படி 112 சதவீதம் வரை மாநகர பஸ்கள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News